சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


51.

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
   தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
   புனிதனை, வனிதைபா கனை, எண்
திக்கெலாங் குலவும் புகழத்திரு வீழி
   மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
   பொடியணிந் தடிமைபூண் டேனே.               (6)
 

51.     பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ‘‘செல்வம்’’ என்பதனோடு
இயையும்.  கனா, நிலையாமை பற்றிவந்த உவமை. ‘சிந்தித்து’’ என்றது,
‘விரும்பி’  என்றவாறு.  ஐவர், ஐம்புலன்கள் அழுந்தி-மிகப் பொருந்தி,
அவமே-வீண்செயலிலே. பொடி-துகள். ‘அவர்க்கு அடிமை  பூண்டேன்’
என்க. ‘இனி எனக்கு என்ன குறை’ என்பது குறிப்பெச்சம். 


மேல்