2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
64. | கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக் கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள் சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள் என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி கற்போல் மனங்கனி வித்தஎம் கருணால யாவந்திடாய் என்றாற் பெற்போ பெருந்திரு வாவடு துறையாளி பேசா தொழிவதே. (7) |
64. கிற்போம் - (வேள்வியை யாம் முடிக்க ) வல்லோம். எடுத்து- அதனைத் தொடங்கி. ஓடிக்கெட்ட - (பின்பு அது மாட்டாமல்) தோற்று ஓடி அழிந்த. சொல்-அத்தேவர்களது புகழ். பயன் தருவது. பயன் எனப்பட்டது. முன்னர்ப் போந்த சொற்குறிப்பால், ‘அவர் புகழ்கள் பயன்தருவனவாகா’ என்பது பெறப்பட்டது. ‘‘பாவிகாள்’’ என்றது, அவர் புகழ்களைப் பயன் தருவனவாகக் கருதிச் சொல்லுவோரை. எனச் சொல்லிச் சொல்லும்’’ என்றது, ‘என்று பலகாற் சொல்கின்ற’ |
என்னும் பொருட்டாய் நின்றது. ‘இத் தூமொழியாளது கற்போலும் மனத்தை’ என்க. என்றால் - என்று அவள் அழைத்தால். “பெற்போ” என்றதை இறுதியிற் கூட்டுக. பெற்பு - பெற்றி; தன்மை. பெற்போ - உனக்கு ஏற்ற தன்மையோ. |