சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

25. கோயில்


252.

நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம
   லத்திரளை நினைப்பார்
மனத்தினு ளேயிருந்த மணி
   யைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கன
   கங்கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியுந் தில்லை
   மாநகர்க் கூத்தனையே.                        (6)
 


252.       ‘‘நிமலத்திரளை’’ என்பது முதலாகத் தொடங்கிப் பூட்டு
வில்லாக  முடிக்க.   நிமலத் திரள்-தூய்மையின் மிகுதி. ‘‘மனத்தினுளே
இருந்த மணி’’ என்றது அற்புத உருவகம். பின்னர் வந்த மணி, அழகு.
‘‘மணியை’’   எனவும்,   ‘‘மாணிக்கத்தை’’  எனவும்  வேறு  வேறாகக்
கூறினாராயினும்,    ‘மாணிக்க   மணியை’   என்பதே   கருத்தென்க.
கனைத்து-ஒலித்து.  கனகம்-மிக்க   நீர்.  ‘‘கழனி’’ என்பதன்றி, ‘கனநீர்’
என்பதே பாடம் போலும்! கனம்-மேகம்.‘‘சினத்தொடு வந்து’’ என்றது,
தற்குறிப்பேற்றம்.


மேல்