2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
| 53. | ஆயிரங் கமலம்ஞாயிறா யிரமுக் கண்முக கரசர ணத்தோன்,
 பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
 படர்சடை மின்னுபொன் முடியோன்,
 வேயிருந் தோளி உமைமண வாளன்
 விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
 போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
 போற்றுவார் புரந்தரா திகளே.                  (8)
 
 | 
| 
 53.     கண் முதலியவற்றை எதிர்நிரனிறையாக்கி, கண் ஒன்றற்கும்ஞாயிற்றை     உவமையாகவும்,     ஏனையவற்றிற்குக்     கமலத்தை
 உவமையாகவும்   கொள்க.   கண்களை,  ‘‘ஆயிர  ஞாயிறு’’ என்றது
 ஒளிமிகுதி    பற்றி.    கரம்-கை.    சரணம்-பாதம்.   பாய்   இருங்
 கங்கை-பாய்ந்தோடுகின்ற     பெரிய     கங்கை.    பனி- குளிர்ச்சி.
 கரந்த-மறைத்த.  படர்-விரிந்த.  சடையாகிய பொன்முடியோன்’  என்க.
 ‘‘போய்’’  என்றது, ‘அடைந்து’ என்றபடி. ‘திருவீழிமிழலைக் கோயிலை
 அடைந்து   போற்றாவிடினும்,   அதனைச்   சூழ்ந்துள்ள  பொழிலை
 அடைந்தேனும் போற்றுவாரது கழல்களைப் போற்றுவார்  புரந்தராதியர்
 ஆவர்’ என்றார், புரந்தரன்-இந்திரன்.
 |