சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


187.

அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே! தென்றில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே         (3)
 

187.     அல்லி-அகஇதழ். பழனம்-வயல். ஆமூர்-திருவாமூர்.  இது
திருநாவுக்கரசர்    திருவவதாரம்    செய்த   தலம்.    ‘‘நாவுக்கரசை’’
என்றதனை.  ‘நாவுக்கரசுக்கு’  எனத்  திரிக்க.  ‘கொல்விடை’   என்பது
ஐகாரம்  பெற்று  நின்றது.  கொல்விடை  போலும்  விடை   என்றபடி.
கொல்விடை,   விடலையர்  தழுவுதற்  பொருட்டு  ஆயர்   இனத்தில்
வளர்க்கப்படுவன. விடை ஏறீ-இடபத்தை ஊர்பவனே.


மேல்