சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


55.

தக்கன். வெங் கதிரோன், சலந்தரன், பிரமன்,
   சந்திரன், இந்திரன், எச்சன்,
மிக்கநெஞ் சரக்கன் புரம்கரி, கருடன்,
   மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
   மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
   பொடியணிந் தடிமைபூண் டேனே.               (10)
 

55.  அரக்கன்-இராவணன். மறலி-கூற்றுவன், கரி-யானை; கயாசுரன்.
வேள் -  மன்மதன்.  திணை   விராய்    எண்ணியவழி மிகுதி பற்றி.
‘இவர்’ என   உயர்திணை  முடிபு   பெற்றது.  அன்றி,  அனைத்துப்
பெயர்களையும்   உயர்திணை   என்றே  கொள்ளினும்    அமையும்.
மிகை-செருக்கு. இந்திரனைத் தோள  நெரித்ததும்,  கருடனை   இடப
தேவரால்   அலைப்பித்ததும்,   பிறவும்   ஆகிய    வரலாறுகளைப்
புராணங்களிற் கண்டுகொள்க.  இதன்  ஈற்றடியில்   உள்ள   தொடர்
ஆறாம்  திருப்பாட்டின்  ஈற்றடியிலும் வந்திருத்தல் காண்க.  


மேல்