சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
74. | கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட ஆண்டகை கேடில்வேற் செல்வன் வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை கார்நிற மால்திரு மருகன் திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக் கருளுங்கொல் முருகவேள் பரிந்தே. (6) |
74. ‘இளங்கிளை’ என்பதே ‘கிளைஇளையன்’ என மாறிநின்றது. |
மேல் |