4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
| 188. | எம்பந்த      வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்கொண்டருளி
 அம்புந்து கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
 செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.       (4)
 
 | 
| 
 188.         ‘எம் வினைநோய்’ என இயையும், ‘பந்த வினை      வல்வினை’எனத்    தனித்தனி        இயைக்க.    பந்தம்-கட்டு.   திருப்பதிகங்களை
 வினைதீர்தற்கு         வழியாகத்      திருக்கடைக்காப்பு        அருளிச்செய்து
 சென்றமையின், ‘‘எம்      பந்த வல்வினைநோய்  தீர்த்திட்ட எமை      ஆளும்
 சம்பந்தன்’’ என்றார். அம்பு உந்து-அம்புபோலப்       பாய்கின்ற. ‘‘தானும்’’
 எனப் படர்க்கையாகக்      கூறினார். ‘‘தான்’’ என்றது,  கூத்தப்பெருமானை.
 இடரின்றி      உணர்த்தும் என்க. ‘கண்ணாளும் தானும்  சேர்ந்து இருக்கை
 தில்லை       அம்பலமே ஆயிற்று’ என மாறிக் கூட்டுக. ‘செம்பொன்னால்’
 என உருபு விரிக்க. இருக்கை-இருக்கும்      இடம்.
 |