8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
| 268. | வானவர்கள்      வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ
 தேனல்வரி வண்டறையுந் தில்லைச்சிற் றம்பலவர்
 நானமரோ என்னாதே நாடகமே யாடுவரே.           (1)
 
 | 
| 
 268,        ‘தேவர்கள் இறந்தொழியாதவாறு நஞ்சினை உண்டு அன்றுஅவர்களைக் காத்த பேரருளாளர், இன்று என் வளைகளைக் கவர்ந்து
 எனக்கு   இறந்துபாடு   உறுவிக்கின்றாரோ  !  இது  வியப்பாகின்றது’
 என்பது,  முதல்  இரண்டடிகளின்  பொருள்.  ஓகாரம், இழிவு சிறப்பு.
 ‘தேன்  வண்டு’  என  இயையும்.  நமர்-  நம் உறவினர். என்னாது -
 என்று  சொல்லாதபடி; என்றது, ‘என் துன்பத்தைத் தவிர்க்காது நின்று’
 என்றதாம். ‘‘நாடகம்’’ என்றது சிலேடை; இறைவனது அருட்கூத்தோடு,
 போலி    வேடங்கொண்டு    நடித்தலையும்   குறித்தலின்.       தனக்கு
 அருளாமை   பற்றி,  அனைத்துயிர்க்கும்  அருள்புரியும்        கூத்தினை,
 ‘நாடகம்’ என்றாள் என்க.
 |