8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
| 259. | அம்பலத் தருநட      மாடவேயும்யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
 உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
 ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
 வன்பல படையுடைப் பூதஞ் சூழ
 வானவர் கணங்களை மாற்றி யாங்கே
 என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
 எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.                   (3)
 
 | 
| 
 259.     ‘‘ஆடவேயும்’‘  என்றாரேனும்,  ‘ஆடுகின்றாய்        என்றும்,ஊட்டினர்  என்றும்  கேட்டு  ‘யாது விளைவதுகொல் என்று  நெஞ்சம்
 அஞ்சி உய்யேனாயினேன்’ என உரைத்தல் கருத்து என்க.  ஏகாரங்கள்
 இசைநிறை. ‘வன்பழியாளராகிய      உம்பர்’  என்க.  ‘உனக்கு   ஊட்டினர்’
 எனச் சொல்லெச்சம்        வருவிக்க. ‘‘உய்யேன்’’  என்றது  ‘இறந்துபடும்
 நிலையில்  உள்ளேன்’ என்றபடி. வன்பழியாளாராகிய      கொடுமை மிகுதி
 பற்றி ‘ வானவர்   கணங்களை  மாற்றுதல்’        ஒன்றையே   எடுத்துக்
 கூறினாளாயினும்,  ‘ஆடுதலை  விட்டு        எழுந்தருளாய்’    என்றலும்
 கருத்தாம். என்னை ? ‘ஒழியாது       ஆடுதலால் இறைவற்குத் திருமேனி
 நேரம் என்பது கருதியும்       வருந்தினாளாதலின்’.      பயலைமை - பசலைத்
 தன்மை.  ‘எழுந்தருளின்  இதுவும்        தீரும்’      என்றவாறு.
 |