6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
| 205. | துச்சான      செய்திடினும் பொறுப்பரன்றே ஆள்உகப்பார்? கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங் கறிகொள்வார்
 எச்சார்வும் இல்லாமை நீஅறிந்தும் எனதுபணி
 நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.         (1)
 
 | 
| 
 205.          துச்சான-இழிவான செயல்களை. ஆள்        உகப்பார்- தமக்குஅடிமையாய்   உள்ளவரை   விரும்புகின்ற       தலைவர்.    ‘கைத்தாலும்’
 என்பது, ‘‘கைச்சாலும்’      எனப் போலியாயிற்று.  கைத்தல்-கசத்தல்.       கதலி
 வாழை;  இஃது  ஆகுபெயராய்  அதன்       காயைக்  குறித்தது.   ‘‘இலை
 வேம்பு’’       என்றதனை,  ‘வேம்பு  இலை’  என       மாற்றுக.   ‘வாழையின்
 பிஞ்சுக்   காயும்,        வேப்பிலையும்  கசப்பனவாயினும்         அவற்றையும்
 கறியாகக்   கொள்வர்       மக்கள்’  என்னும்  இவ்வுவமையை         முன்னர்
 வைத்து    உரைக்க.        எச்சார்வும்-யாதொரு   துணையும்.         ‘எனக்கு
 இல்லாமை’   என   உரைக்க.        நச்சாய்-நீ   விரும்பவில்லை.        ‘இது
 பொருந்துவதோ’  என்னும்       குறிப்பெச்சம்  வருவித்து   முடிக்க.      காண்,
 முன்னிலையசை.
 |