சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


97. 
  

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந்
   திறத்தவர் புறத்திருந் தலச,
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
   மற்றோரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே
   புரியவும் வல்லரே; எல்லே
அக்கடா வாகில்; அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (7)
 

97.   திக்கு அடா நினைந்து-பலதிசைகளிலும் அடுத்து நினைந்து ;
என்றது,   (இறைவனை)   ‘எங்கும்   தேடி   அலைந்து’   என்றபடி.
இடிந்து-துயருற்று   புறத்து  இருந்து-ஆட்கொள்ளப்படாமல்  இருந்து,
அலச-மெலிய.  மைக்  கடா-கரிய  நிறம் பொருந்திய கடா ; எருமைக்
கடா  இஃது  உணர்வின்மை  பற்றி  வந்த  உவமை.  ஆள்-அடிமை,
‘‘ஆளாக’’  என  ஆக்கம் விருவிக்க. பொய்-நிலையாமை. ‘‘பொய்க்கு’’
என்ற     நான்கனுருபை,    இரண்டனுருபாகத்    திரிக்க.    அடா
வண்ணம்-பொருந்தாதபடி. ‘‘புரியவும்’’ என்ற உம்மை. சிறப்பு. கல்லில்
நார் உரித்ததுபோன்ற செயலாதல் பற்றி, ‘வல்லரே’ என்றார், ‘‘எல்லே’’
என்பது ‘என்னே’ என்பது போன்றதோர் இடைச்சொல் ; இஃது இங்கு
இறைவரது  கருணையை   வியந்த  வியப்பின்கண் வந்தது. ‘அக்கடா’

என்பது     அமைதிக்  குறிப்புத்  தருவதோர்      இடைச்சொல்லாய்
வழங்கும்,  கலலையின்றி  இருப்பவனை, ‘அக்கடா என்று இருந்தான்’
என்பர்.    ‘‘அக்கடாவாகில்’’    என்றதற்கு,    ‘எனக்கு    அமைதி
உண்டாயிற்றாயின்’  எனவும்,  ‘‘அவர்’’  என்றதற்கு, ‘அதற்கு ஏதுவாய
அவர்’ எனவும் உரைக்க  


மேல்
Try error :java.sql.SQLException: Closed Resultset: next