சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

14. திருப்பூவணம்


145.

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
   பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
   எளிமையை என்றும்நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
   தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச்சோலை ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.                (2)
 

145.     ‘‘முத  றேவர்’’  என்பதல்லது.  ‘முதற்  றேவர்’  என்பது
பாடமாகாது.  ஏம்பலித்து-வருந்தி,  தேம்  புனற்  பொய்கை-தேனொடு
கூடிய  நீரையுடைய  பொய்கையின்  நீரை.  பொய்கை,   ஆகுபெயர்.
தேறல்-தேன்.   ‘‘ஒழுகும்’’   என்றது,   ‘பணை’  சோலை’  என்னும்
இரண்டனையும்  சிறப்பித்தது.  பணை-வயல்,  ‘பணை  வீதி, சோலை
வீதி’ எனத் தனித்தனி முடிக்க.  


மேல்