சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்


169.


  

பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
   தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
   எளிமையை யென்றுநான் மறக்கேன் 
மின்னெடும் புருவத் திளமயி லனையார்
   விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (8)
 

169.    ‘பழையோர்   பலர்     பன்னெடுங்காலம்    பணிசெய்து
ஏம்பலித்திருக்க’   எனக்   கூட்டுக.   ஏம்பலித்திருக்க   -   வருந்தி
யிருக்க.  ‘கோயிலாக’  என,  ஆக்கம் வருவிக்க. ‘‘நெஞ்சு’’ என்றதனை,
‘‘என்’’   என்றதனோடு    கூட்டுக.  மறக்கேன்-மறவேன்  ;  இவ்வாறு
முன்னும்  வந்தது.   ‘‘நெடும்புருவத்து’’   என்பதனை  முன்னே கூட்டி,
‘மின்னும்  இளமயிலும்   அனையார்’  என உரைக்க. விலங்கல்- மலை,
செய், உவம உருபு. ‘நாடக சாலைக்கண்’ என உருபு விரிக்க.  


மேல்