சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


15.

தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
   கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
   பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
   றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா!
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
   மணிக்குறங் கடைந்ததென் மதியே.              (4)
 

15.   ‘தெருவில்’ என்பதனை முதலிற் கொள்க. ஓத்து-வேதம். ‘கடல்
ஒலிபோல’  என  உவம உருபு விரிக்க. ‘பெரும்  பற்றப் புலியூரின்கண்
திகழும்’   என்க.   ‘சீர்’   என்பது   தாள  அறுதி.  இலயம்- தாளம்.
‘‘இயல்பின்’‘  என்றதில் இன்,சாரியை. ‘இயல்பினோடு’ என  மூன்றாவது
விரிக்க. மா-சிறந்த, மணிக் குறங்கு-அழகிய துடை.  


மேல்