7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
23. கோயில்
234. | வான நாடுடை மைந்தனே யோஎன்பன்; வந்தருளாய் என்பன்; பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ண னேஎன்பன்; தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற ஏன மாமணிப் பூண்அணி மார்பனே எனக்கருள் புரியாயே. (9) |
234. வான நாடு-சிவலோகம். மைந்தன்-பேராற்றலுடையவன். ‘வானநா டுடையவனாயினும் என் பொருட்டு இங்கு வந்து அருள்’ என்றவாறு. பால், நெய் முதலிய ஐந்தையும் ஒருங்கு ஆடிய’ என்க. ஏன மா-பன்றியாகிய விலங்கு; இருபெயரொட்டு. அதனது மருப்பே இறைவன் மார்பில் அணியாய் நிற்றலின், ‘ஏனமாப் பூண்’ என்றார். மணி-அழகு. இது தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம். |
|