7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
25. கோயில்
249. | கள்ளவிழ் தாமரைமேற் கண் டயனொடு மால்பணிய ஒள்ளெரி யின்னடுவே உரு வாய்ப்பரந் தோங்கியசீர்த் தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத் துள்ளெரி யாடுகின்ற ஒரு வனையு ணர்வரிதே ! (3) |
249. கள் அவிழ்-தேனோடு மலர்கின்ற. ‘தாமரைமேல் அயன்’ என இயையும். ‘கண்ட’ என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. கண்ட-உலகத்தைப் படைத்த. ‘‘முழுவதுங் கடைவனை’’ என்ற திருவாசகத்தைக் காண்க (திருச்சதகம்.7.). பணிய-செருக்கொழிந்து வணங்குமாறு. ‘நடுவே எரியின் உருவாய்’ என மாற்றுக. நடுவே-அவ்விருவர்க்கும் நடுவிலே. ‘ஓங்கிய ஒருவன்’ எனவும். ‘சீர்த் தில்லை, தெள்ளிய தில்லை, எனவும் இயையும். தெள்ளிய-மேலோர், தமக்குப் புகலிடமாகத் தெளிந்த. ‘உணர்தல் எனக்கு அரிதாகியே விடுமோ’ என்பது பொருள். உணர்தல், இங்குத்தலைப்பட்டுணர்தல், ‘ஒருவன்னை’ என ஒற்று விரித்து ஓதுவதே பாடம் போலும் ! |