சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


90.

இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத்
   தெண்ணிலங் கண்ணிலபுன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த்
   துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
   பொழிலகங் குடைந்துவண் டுறங்கச்
செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                  (11)

திருச்சிற்றம்பலம்
 


90.  பரவை  சூழ்  அகலம்-கடல்  சூழ்ந்த  அகன்ற  பூமி.  அம்
கண்-‘அழகிய   கண்’  எனப்படும்  அறிவு. ‘எண்ணில்  புன்மாக்கள்’
எனவும்,   ‘புன்மாக்கள்  அறிவுறு  தமிழ்மாலை’  எனவும்  இயைக்க.
திருந்து  உயிர்ப் பருவத்து அறிவு உறு-திருந்துகின்ற உயிரின் பரிபாக
நிலையில்   ஞானம்  பெறுதற்கு  ஏதுவான  (  தமிழ்மாலை  என்க).
கருவூர்த்  தேவரை, ‘‘கருவூர்’’ என்றது உபசாரம். துறை-புறப்பொருள்
துறை ; கடவுள் வாழ்த்துப் பகுதி. ‘தமிழ் மாலையைப் பொருந்துகின்ற
அரிய   கருணையை  யுடைய  பரமர்’  என்க.  பொருந்துதல்-உளங்
கொண்டு ஏற்றல். செருந்தி, ஒருவகை மரம்.


மேல்