சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

24. கோயில்


246.

வானோர் பணிய மண்ணோர் ஏத்த
   மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
   சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி

   சொன்ன தமிழ்மாலைப்

பானேர் பாடல் பத்தும் பாடப்
   பாவம் நாசமே.                             (11)

திருச்சிற்றம்பலம்
 


246.     மன்னி  -  என்றும்  நின்று.  பால்  நேர்-பால்போலும்
இனிமையுடைய. ‘நாசம்ஆம்’ என்னும் ஆக்கச் சொல் தொக்கது.  ‘‘தூ
நான்  மறையான்’’
என்றதனால்,  இவர்  மறையவர் குலத்தினராதல்
விளங்கும். இது, முன்னைப் பதிகத்திலும் கூறப்பட்டது.


மேல்