8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
276. | முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார் சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற் றம்பலவர கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே. (9) |
276. முத்தர்-இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். முதுபகல்-முற்றிய பகல்; நண்பகல். பத்தர் பலி இடுக-அன்பராய் உள்ளார் பிச்சை இடுவார்களாக. எங்கும்-எனது உருவம் முழுதும். ‘இல்லில் வந்து என்னை முழுதும் நோக்குதல் பற்றி இவர் நமக்கு அருளுவார் என்று கருதி யான் இவர் தம் மன்றிற்குச் சென்றால், என்னைச் சிறிதும் கடைக்கணிக்கின்றிலர்’’ என்பாள். ‘‘இல்புகுந்து பார்க்கின்றார்; ஆடுங்கால் நோக்கார்’’ என்றாள். ‘இஃது இவர் வஞ்சகச் செயல்போலும்’ என்றவாறு. இறைவனது திருவருளைப்பெற விரைவார் இறைவனை இங்ஙனம் கூறுதல் இயல்பு என்க. |