சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

4. கோயில்


40.

‘ஆடர வாட ஆடும்
   அம்பலத் தமுதே’ என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
   திருவிலா உருவி னாரைச்
சாடரைச், சாட்கை மோடச்
   சழக்கரைப், பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (6)
 

40.     ஆடு அரவு-படம் எடுத்து  ஆடுந்தன்மை  யுடைய பாம்பு.
ஆட-அது,   தன்   மேனியில்   இருந்து  அசைய.  என்னும்- என்று
துதிக்கன்ற.     சேடர் -  பெருமையுடையவர்.     திரு  -  நல்லூழ்.
உருவினார்-உயிரற்ற    உடம்புகளாய்    உள்ளவர்.    சாடர்- சகடர்;
நிலையில்லாதவர். சாண் கை - சாணாகப் பிடித்த கையளவை  யுடைய.
‘சாண்    மகன்’    என்பது.    சிறுமை   குறிப்பதோர்    இகழுரை.
மோடு-முருட்டுத்    தன்மை;   இஃது,   அகரம்   பெற்று    வந்தது.
சழக்கர்-பொய்யர்.  பிழைத்தல்-வயிறு  வளர்த்தல்.  ‘பிழக்க’   என்பது
பாடம்  அன்று.  பிட்டல்-ஒன்றைச் சிதைத்தல். இதன்பின்,  ‘மாட்டாத’
என  ஒருசொல்  வருவிக்க  பேடர்-ஆண்மை  இல்லாதவர்;  மேலான
பயனை எய்துதலே ஆண்மை என்க.  


மேல்