சொல்லகராதிச் சுருக்கம்

5. கண்டராதித்தர் திருவிசைப்பா

20. கோயில்


204.

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
   அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
   தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
   அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
   பேரின்பம் எய்துவரே.                        (10)

திருச்சிற்றம்பலம்
 


204.   சீரால் மல்கு-புகழால் உலகெங்கும் நிறைந்த,    ‘‘தஞ்சையர்
கோன்’’
   என்றதனால்,   இவர்    தஞ்சாவூரைத்     தலைநகராகக்
கொண்டிருந்தமை   பெறப்படும்.   ‘‘கோழிவேந்தன்’’  என்றது  மரபு
குறித்ததாய்,  ‘சோழ  மன்னன்’  என்னும்  அளவாய் நின்றது.  ‘கோழி
வேந்தன்,    தஞ்சையர்   கோன்   கண்டராதித்தன்    அம்பலத்தாடி
தன்னைக்  கலந்த  அருந்தமிழ்  மாலை’  என்க.   ஆரா இன்சொல் -
தெவிட்டாத இனிமையையுடைய சொல்லையுடைய.    பேரா    உலகு-
சென்றடைந்தோர்   நீங்காது நிலைபெறும் உலகம்; வீட்டுலகம்.  


மேல்