சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

23. கோயில்


226.பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
   படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
   துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
   டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
   தழல்மெழு கொக்கின்றதே.                    (1)
 

226. படர்தல்-மூடுதல், ‘வரையில்’  எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
பவளமலை  சிவபெருமானுக்கும், அதனை மூடிய  பனி அப்பெருமான்
பூசியுள்ள திருநீற்றுக்கும் உவமை.  கண்ணி-முடியில் அணியும் மாலை.
‘‘கொன்றை’’      என்றதும்      அதனாலாகிய     கண்ணியையே.
துன்று-பொருந்திய.      பொன்-பொன்போலும்,      குழல்-சுருண்ட,
திவள-விளங்க,  ‘திருநீறும்,   சடையும்  திவள  நடம்புரிகின்ற’ என்க.
தவளவண்ணன்-வெண்மை நிறத்தை உடையவன்.


மேல்