சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை


59.

மாதி மணங்கம ழும்பொழில்
   மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
   சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
   அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள், பொன்னெடுந்
   திண்டோள் புணர நினைக்குமே.                (2)
 

59.    மாதி - மாது உடையவள், தலைவி. மாது - அழகு. “மாதி”
என்றது  “அறிகிலள்”  என்பதனோடு  இயையும்.  மெய்ச்   சுருதி -
உண்மை   நூலாகிய   வேதம்.   அதன்  விதிவழியோர்,  அந்தணர்.
புராணன் - பழையோன்; என்றது, ‘முற்பட்டவன்’ எனப் பொருள்தந்து.
அமரர்களையும்   தோற்றுவித்தோனாதல்  குறித்தது  “நீதி”  என்றது
பெருமையை;  ‘அதனை  அறியாதவளாய் அவன் திண் .தோள்களைப்
புல்ல   நினைத்தாள்:   இது   கூடுவதோ’   என்றபடி.  இக்கூற்றால்,
இவ்வாசிரியர்க்கு  இறைவன்  திருவருட்கண்  உள்ள வேட்கை மிகுதி
புலனாகும். “அறிகிலள்” என்றது முற்றெச்சம்.  


மேல்