சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை


61.

தருணேந்து சேகர னேயெனுந்
   தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
   புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
   துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
   திலக நுதலி திறத்திலே.                       (4)
 

61.     பொருள் - மெய்ப்பொருள். நேர்ந்த -   தெளிந்த, அருள்
நேர்ந்து  -  அருளைத்  தர  இசைந்து  தெருள்  நேர்ந்த   சித்தம்-
இவளது  துன்பத்தைத்  தெளிய  உணர்ந்த மனம்.  ‘மனம்’  என்பதை,
‘உனது  மனம்’  என  உரைக்க.  வலியவா  - கடிதாய்  இருந்தாவாறு.
இதனை  இறுதியில் வைத்து, ‘வருந்தத்தக்கது’ என்னும்  சொல்லெச்சம்
வருவித்து  முடிக்க. இதனுள், ‘தருணேந்து சேகரனே’ என்பது ஒன்றும்
தலைவி கூற்று. ஏனைய, செவிலி கூற்று.  


மேல்