சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


94. 
  

பழையராந் தொண்டர்க் கெளியரே; மிண்டர்க்
   கரியரே; பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப்
   பிச்சரே; நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்
   குழகரே; ஒழுகுநீர்க் கங்கை
அழகரே; ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (4)
 

94.     பழையராந்   தொண்டர்-நெடுங்காலமாகத்     தொண்டு
செய்துவருபவர்.  மிண்டர்-வன்கண்மை  யுடையவர்.  ‘‘பிணி’’ என்றது
வினையை, ‘எனது குற்றமான செயலைப் பொருட்படுத்தாது நீக்குதலும்,
அவ்வாற்றால்  எனக்கு வினை உண்டாகாமல் தடுத்தலும் செய்யாதவர்’
என்றபடி.   இதனால்,   இவ்வாசிரியர்   தமது   வினையால்  தமக்கு
உண்டாகிய     துன்பத்தை     உணர்ந்திருந்தமை    பெறப்பட்டது.
குழகர்-இளையவர். கங்கை அழகர்-கங்கையை அணிந்த அழகர்.  


மேல்