சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

15. திருச்சாட்டியக்குடி


154.

தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம் ;
   தொடர்வன மறைகள்நான் ; கெனினும்
கழுதுறு கரிகா டுறைவிடம் ; போர்வை,
   கவந்திகை கரியுரி ; திரிந்தூண் ;

தழலுமிழ் அரவம் கோவணம் ; பளிங்கு
   சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.                 (3)
 

154.     ‘நான்கும்’  என்னும்    முற்றும்மை    தொகுத்தலாயிற்று.
கழுது-பேய்.   கரி   காடு  -  கரிகின்ற   காடு ; சுடுகாடு. கவந்திகை-
உணவு.     ‘போர்வை   கரிஉரி,   கவந்திகை திரிந்தூண்’ என  நிரல்
நிறையாகக்  கொள்க.  திரிந்து ஊண்- அலைந்து ஏற்கும் உண்டி. தழல்
உமிழ்-கண்ணால் நெருப்பைச் சிந்துகின்ற ;   என்றது ‘சீற்றத்தையுடைய’
என்றபடி.   பளிங்கு-படிகமணி.    ‘சாட்டியக்குடியார்    ஓம்பு  அழல்,
விளக்கு    என்க.    இழுது    நெய்-வெண்ணெயை    அப்பொழுது
உருக்கிக்கொண்ட  நெய்.  ‘பணிகேட்டுச்  சூழ்பவர்  அயன்  முதலிய
தேவர்களும்,   அறிய   மாட்டாது   ஆய்ந்து   தொடரும்   நூல்கள்
வேதங்களும் ஆகிய பெருமைகள் காணப்படினும், அவன்   உறைவிடம்
சுடுகாடு  முதலியவையாய் உள்ளன ; இஃது அறிதற்கரிதாய்   இருந்தது’
என்றவாறு,  இங்கும்,  ‘உறைவிடம்  கரிகாடு  ;  கோவணம்,  அரவம்;
சபவடம்  பளிங்கு ; விளக்கு அழல்’ என மாற்றுக. ‘‘பளிங்கு’’  என்றது,
மாணிக்கம் முதலிய பிற இரத்தினங்களல்லாமையை உட்கொண்டது.  


மேல்