3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
| 166. | எவருமா      மறைகள் எவையும்வா னவர்கள் ஈட்டமும் தாட்டிருக் கமலத்
 தவருமா லவனும் அறிவரும் பெருமை
 அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
 உவரிமா      கடலின் ஒலிசெய்மா மறுகில்
 உறுகளிற் றரசின தீட்டம்
 இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
 இராசரா சேச்சரத் திவர்க்கே.                        (5)
 
 | 
| 
 166.        ‘‘எவரும்’’ என்றதற்கு, ‘மக்கள் யாவரும்’ என      உரைக்க. தாள்திருக்  கமலம்-தண்டினையுடைய         அழகிய தாமரை மலர். அதன்கண்
 இருப்பவர்,       பிரமதேவர்.    பிரமனைப் பன்மையாற்      கூறியது முடிதேடி
 வந்த         பொழுது,      ‘அறிந்து           வந்தேன்’       எனப்பொய்
 கூறிய          இழிவை              உட்கொண்டு.        அறிவரு -
 அளவறியப்படாத.          அளவறியப்படாமையை         வெளிப்படுத்தினோர்
 அயனும்,          மாலுமாயினும்    அறியமாட்டாமை          அனைவர்க்கும்
 பொதுவாதல்         பற்றி,    அவ்விருவரோடு,         ஏனைய    பலரையும்
 உளப்படுத்துக்       கூறினார். பெருமை,  அடி பாதலத்தைக் கடந்தும்,      முடி
 அண்டங்கள்       எல்லாவற்றையும்             கடந்தும்          நின்றமை.
 ‘பெருமையையுடைய  தழல்’  என்க.        அடல்-அடுதல்  ;  வருத்துதல்.
 ‘வருத்துதலையுடைய   அழல்’          என்க.  அழல்-வெப்பம்,  பிழம்பர்,
 ‘பிழம்பு’             என்பதன்              போலி.              பிழம்பு-வடிவம்.
 உவரி-உவர்ப்புடையதாகிய.        ‘‘அரசு’’ என்றது பன்மை குறித்து நின்றது.
 ‘மா மறுகில் உறு களிற்றினது       ஈட்டம் மாகடலின் ஒலிசெய்’ என மாற்றி
 அதனையும்.  ‘‘இஞ்சி  சூழ்’’        என்பதனையும், ‘தஞ்சை’ என்பதனோடு
 தனித்தனி  முடிக்க.        இவரும்-உயர்ந்த.  ‘‘மால்வரை  செய்’’ என்றதில்
 உள்ள செய், உவம உருபு. ‘இவர்க்குப் பிழம்பர் தழல்’ என முடிக்க.
 |