சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

12. திரைலோக்கிய சுந்தரம்


130. 
  

ஆறாத பேரன்பி னவர்உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி ; அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (9)
 

130.     ஆறாத-தணியாத.  அன்பு  காதலாய்  முறுகிய  ஞான்று
கனல்போல்    உள்ளத்தைக்    கவற்றுதலின்,  ‘‘ஆறாத    அன்பு’’ 
என்றாள்.       ‘‘அன்பினவர்’’       என்றதில்,         இன்னும்,
அகரமும்     ஆகிய இருசாரியைகள் வந்தன. வேறாக -   பேரன்பர்
அல்லாத  பிறராக.  இவர்  சிறிதன்பு  உடையவர்.  வீறாடி  - அவர்
அனைவரினும்  பெருமை பெற்றவளாய். உன்னைப் பொது  நீப்பான்-
உன்னைத்  தன்  ஒருத்திக்கே  உரியனாகச்  செய்து  கொள்ளுதற்கு,
விரைந்து-  விரைதலைக்  கொண்டு.  இன்னும்  தேறாள் -  இன்னும்
அம்மயக்கம்   தெளியப்பெற்றிலள்.  ‘இறைவனை  ஒருத்தி  தனக்கே
உரியனாகச்     செய்துகொள்ளுதல்     இயலாத    தொன்றாதலின்,
அவ்வெண்ணத்தை    மயக்கம்’    என்றாள்.   ‘காதல்   மிகுதியால்
இன்னதோர் எண்ணம் இவட்குத் தோன்றிற்று’ என்பதாம். 


மேல்