சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


14.

வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
   கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
   பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
   இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா!
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
   நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே.          (3)
 

14. வரம்பு இரி-கரைக்குமேல் பாய்கின்ற. மிளிர்-பிறழ்கின்ற. கரும்பு,
பின்னர்க்     கூறப்படுகின்ற     செந்நெல்     வயலில்    உள்ளது.
மாந்திடும்-உண்கின்ற.   மேதி-எருமை.   பிரம்பு  இரி- பிரப்பம்புதரில்
செல்கின்ற,     ‘செந்நெற்   கழனியையுடைய    பழனம்’     என்க.
பழனம்   -   மருத      நிலம்.   ‘சிரம்  புரைமுடி - தலையின்கண்
உயர்ந்த       முடியை      அணிந்த.  முறையால்   -  தமக்கேற்ற
வரிசையில்.  ‘மாந்து மேதிகள்  சேர்’ ‘பரம்பிரி’  ‘கழனி  செங்கழுநீர்’,
‘சிரம்புணர்முடி’ என்பனவும் பாடங்கள்.  


மேல்