சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


222.

செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு
   தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்
   தாடுசிற் றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக்
   காதும் காதினின் மாத்தி ரைகளோ
டைய தோடுமன்றே அடி
   யேனை ஆட் கொண்டனவே.                  (8)
 


222.  செய்ய கோடுடன்- நல்ல சங்குகளுடன்  மாத்திரைகள்-சிறந்த
சுருள்கள்; என்றது, குழையை. ஐய-அழகிய. இதனுள்,   ‘மகிழ்ந்து, அடி’
என்பன கூன்.


மேல்