சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


25.

‘கானே வருமுரண் ஏனம் எய்த
   களிஆர் புளினநற் காளாய்! ’ என்னும்;
‘வானே தடவு நெடுங் குடுமி
   மகேந்திர மாமலை மேல்இ ருந்த
தேனே ! ’ என்னும் தெய்வ வாய்மொழியார்
   திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே ! ’என் னும் ‘குணக் குன்றே ! ’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (3)
 

25.     ‘‘கானே,   வானே’’    என்ற    பிரிநிலை   ஏகாரங்கள்
சிறப்புணர்த்திநின்றன. முரண் ஏனம்-வலிய பன்றி. களி ஆர் -களிப்புப்
பொருந்திய. அருச்சுனனோடு ஆடல் தொடங்க  நின்றமை    குறித்து
காளாய்       என்று      கூறினார்.  புளினக்காளை  -  வேடர்குல
இளைஞன்.    ‘‘வாய்மொழி’’  என்றது, வேதத்தை. திரு-திருவருள். 


மேல்