சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

7. திருவிடைக்கழி


74.

 கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட
   ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
   கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக்
   கருளுங்கொல் முருகவேள் பரிந்தே.              (6)
 

74.     ‘இளங்கிளை’ என்பதே ‘கிளைஇளையன்’ என மாறிநின்றது.
‘இளைய  பிள்ளை’  என்றவாறு. சேய் - முருகன். ‘ இளங்கிளையாகிய
முருகன்’  என்க.  கிரி,  கிரவுஞ்ச  மலை.  திளை -  பலரும் இன்பம்
துய்க்கின்ற. முளை இளங்களிறு-மிகவும் இளைய களிறு.  ‘‘முருகவேள்’’
என்றதை.   ‘‘களிறு’’   என்றதன்   பின்னும்   ‘‘பரிந்து’’   என்றதை,
‘‘சிறுமிக்கு’’ என்றதன் பின்னும் கூட்டுக. பரிந்து - அன்புகொண்டு  


மேல்