சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


100.

நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
   நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
   நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
   அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
   இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.              (10)

திருச்சிற்றம்பலம்
 


100.     நீர் அணங்கு அசும்பு-நீரினது அழகிய  ஊறுதலையுடைய
‘ஆதித்தேச்சரத்துத்  திருவடி  நிலை’  என  இயையும், ‘திருவடிக்கும்
ஆகாது   திருவடிநிலைக்கே  ஆகும்’  என்பார்,  ‘‘திருவடிநிலைமேல்
மொழிந்த’’  என்றார்  ஆரணம்  மொழிந்தவாய்-வேதம்  ஓதியவாய் ;
இவர் தம்மை வேதம் ஓதியவராகப் பின்னரும் குறிக்கின்றார்.  அமுதம்
ஊறிய-அமுதம்  சுரந்தது போல இனிமை வாய்ந்த.  ‘தமிழ்மாலைக்கண்
உள்ள  இருநான்கு இரண்டு’ என்க. ஏர் அணங்கு-எழுச்சி பொருந்திய
அழகினை  யுடைய.  இருநான்கு  இரண்டு-பத்து ; பத்துப்  பாடல்கள்.
இருள்-அறியாமை. சிந்தையர்- உள்ளத்தையுடையவராவர்.


மேல்