சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


218.

போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
   மகள்உமை யச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தட
   மல்குசிற் றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
   வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த கச்சதன்றே தமி
   யேனைத் தளர்வித்ததே.                       (4)
 


218,     போழ்ந்து - உரித்து, ‘உமையது   அச்சத்தைப்  பின்னர்க்
கண்டவன்’  என்க. இனி, ‘‘கண்டவன்’’ என்றதற்கு’  ‘உண்டாக்கினவன்’
எனப்  பொருள்  கொண்டு,  ‘உமைக்கு  என  நான்காவது விரித்தலும்
ஆம்.  தாழ்ந்த புனல் - ஆழ்ந்தநீர். தொடுத்து  வீக்கும் - வளைத்துக்
கட்டிய. பொன் நூல்-அழகிய பூணநூல்.    ‘‘பொன்னூல் தன்னினொடு’’
என்பதை  ‘‘சிற்றம்பலவன்’’ என்றதன்  பின்னர்க்   கூட்டுக.   தாழ்ந்த
கச்சு-பொருந்திய  கச்சு. இப்பாடலில் சீர்கள் சிறிது வேறுபட்டு வந்தன.  


மேல்