6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
| 206. | தம்பானை      சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க் கில்லாமை என்னளவே அறிந்தொழிந்
 [தேன்
 வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன் தொழில்      இறையும்
 நம்பாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.   (2)
 
 | 
| 
 206.      ‘சாய’      என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று.      தம் பானைசாயப்         பற்றார்  -   ஒருவரும்        தங்கள்         பானையைக்    கீழே
 விழுமாறு       பிடிக்கமாட்டார்கள்;   அஃதாவது,               ‘கருத்தின்றிப்
 | 
| புறக்கணிப்பாகக்          கையாளார்’   என்பதாம்,        முதுசொல்-பழமொழி,‘இறைவன்  தம்மைப்  புறக்கணித்துவிட்டான்’        என்னும் கருத்தினால் ’
 அம்முதுசொல்     எம்போல்வார்க்கு    இல்லாமை    என்னளவிலே
 அறிந்தொழிந்தேன்’  என்றார்.  ‘‘சொல்லும்’’       என்னும் உம்மை, சிறப்பு.
 ‘‘அறிந்தொழிந்தேன்’’  என்பது  ஒருசொல்       நீர்மைத்து, வம்பு ஆனார்
 பணி   உகத்தி-புதியராய்  வந்து  அடியராயினாரது  தொண்டினையும்
 விரும்புகின்ற  நீ  ‘பணியும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி
 அடியேன்   தொழில்   இறையும்       நம்பாய்- வழியடியேனாகிய  எனது
 தொண்டினைச் சிறிதும்      விரும்பவில்லை.
 |