7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
| 216. | சலம்பொற்      றாமரை தாழ்ந்தெ ழுந்ததடமுந்த டம்புனல் வாய்மலர் தழீஇ
 அலம்பி வண்டறையும் அணி
 யார்தில்லை யம்பலவன்
 புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
 தேத்த      ஆடுபொற் கூத்த னார்கழற்
 சிலம்பு      கிங்கிணிஎன் சிந்தை
 யுள்ளிடங் கொண்டனவே.                           (2)
 
 | 
| 
 216.      சலம் - நீரின்கண்.      பொன் - அழகு. தாழ்ந்து எழுந்து       - ஆழவேரூன்றி  வளர்ந்த.      தடம் - குளத்தின்கண். ‘தடமும்’ என்பது       பாடம்
 அன்று,        தடம்    புனல்வாய்  -மிக்க   நீரின்கண்   உள்ள.        ‘அத்
 தடம்புனல்வாய்’ எனச்       சுட்டு வருவிக்க.       அலம்பி - கிண்டி. புலம்பி - முறையிட்டு்.       தானவர்-அசுரர்.                   பொற்      கூத்து - பொன்போலச்  சிறந்த
 நடனம், சிலம்பு-  ஒலிக்கின்ற.       இதனுள்ளும், ‘‘அணி,                  சிந்தை’’ என்பன
 கூன்.
 |