சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

12. திரைலோக்கிய சுந்தரம்


126.

நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால் ;
ஆவாஎன் றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்
தேவாதென் பொழிற்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (5)
 

126. நீ  வாராதொழிந்தாலும் -  நீ   இவள்பால்    வாராவிடினும்.‘
ஏழை   நின்பாலே    விழுந்து’    என    மாற்றி,       ‘‘விழுந்து’
என்றதனைத்     திரித்து, ‘எளியளாகிய இவள் நின்னிடத்தே   வந்து
விழ’   என   உரைக்க.   ‘குவளை  மலரும்  கோவாத மணிமுத்துச்
சொரிந்தன’  என  உம்மையை மாற்றி உரைக்க. குவளை மலர்-கண் ;
உருவகம்.   ‘கோவாத   மணியாகிய   முத்து’  என்றது, கண்ணீரைக்
குறித்தல் வெளிப்படை. ஆவா, இரக்கக் குறிப்பு. தென்-அழகு.  


மேல்