சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

12. திரைலோக்கிய சுந்தரம்


127. 
  

முழுவதும்நீ யாயினும்இம் மொய்குழலாள் மெய்ம்
                                     [முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் ; பயில்வதும்நின்
                                 [னொருநாமம்;
அழுவதும்நின் திறம்நினைந்தே; அதுவன்றோபெறும்பேறு !
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (6)
 

127.     மெய்  முழுதும்-தனது  உடல்  உறுப்புக்கள்     பலவும்
பழுது-குற்றம்  உடையன.  ஓராள்-அவற்றை மதிக்கின்றிலள் ; எனவே
‘உண்ணாமை,   நீராடாமை,  ஒப்பனை  செய்யாமை  முதலியவற்றால்
அவைகளை   வருத்துகின்றாள்’   என்பதாம்.   எல்லாப்  பொருளும்
நீயேயாயினும்,     நீ     அங்ஙனம்     எங்குமாய     இன்பத்தை
இவ்வுடம்புகொண்டு  இவள்  பெறாமையால், இதனை வெறுக்கின்றாள்’
என்பது  பொருள்.  இதனால்,  சிவன்  முத்திநிலையில்  நிற்பார்க்கும்
பரமுத்தி  நிலைக்கண்  உளதாகும்  வேட்கை மிகுதி குறிக்கப்பட்டமை
காண்க.  ‘‘அதுவன்றோ  பெறும்  பேறு’’  என்றது,  ‘‘இவள்  பெற்றது
அவ்வளவே’   என்னும்   பொருட்டாய்   அவலம்  குறித்ததாயினும்,
உண்மைப்     பொருளில்,     இவ்வுடம்புகொண்டு     பெறும்பேறு
அதுவேயன்றோ’ என்பது குறித்துநிற்கும்.  


மேல்