சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


133.

அன்னமாய் விசும்பு பறந்தயன்தேட
   அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
   எளிமையை யென்றும்நான் மறக்கேன் !
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா !
   முக்கணா ! நாற்பெருந் தடந்தோட்
கன்னலே ! தேனே ! அமுதமே !கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                  (1)
 

133.   தேட-தேடுமாறு, அங்ஙனே-அவ்விடத்தே ; என்றது, ‘மாலும்
அயனும்    பொருதவிடத்தே’    என்றதாம்.    ‘‘பெரிய’’    என்றது,
‘பெரியோனாய்  நின்ற’  என  ஆக்கவினைக்  குறிப்புப் பெயர். ஆள் 
விரும்பி-ஆளாக விரும்பி. ‘‘மறக்கேன்’’ என்றதில் எதிர்காலங் காட்டும்
ககர   வொற்று   வந்ததன்று  ;  குகரச்  சாரியை  வந்தது.  எனவே,
‘மறவேன்’ என்பது பொருளாயிற்று. இவ்வாறு வருதல் பிற்கால வழக்கு.
இருவன்  இரு  பொருளாய் இருப்பவன். இரு பொருள்-சத்தி,  சிவம் ;
பெண்மை, ஆண்மை, கன்னல்-கரும்பு.  


மேல்