சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


192.


  

பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. (8)
 

192.     ‘பாடகமும்  நூபுரமும்   பல்  சிலம்பும்  பேர்ந்தொலிப்ப,
நாள்தோறும்  நாடகத்தின்  கூத்தை  நவிற்றும்  அவலாகிய சூடகக்கை
நல்லார்     தொழுது       ஏத்தத்     தொல்லுலகில்        ஆடு
நின்    அரங்கு ஆடகத்தால்    அமைந்த அம்பலம்’ எனக் கொண்டு
கூட்டி  உரைக்க. ‘பாடகம், நூபுரம்,  சிலம்பு’ என்பன, மகளிரது காலில்
அணியும்   அணிவகைகள்.     பேர்ந்து-அசைந்து.  சூடகம்-கைவளை.
நாடகம்-கதை   தழுவிய   கூத்து.   ‘அது   போலும்  கூத்து’  என்க.
அஃதாவது,  கதைப்  பொருளைக்  கைகாட்டி   ஆடும்  கூத்து.  இன்
கூத்து-இனிய கூத்து. நவிற்றுதல்-செய்தல். மேய்ந்து-வேயப்பட்டு.


மேல்