சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


20.

திருநெடு மால், இந் திரன் அயன், வானோர்
   திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
   பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
   விரித்தசிற் றம்பலக் கூத்தா!
கருவடி குழைக்கா தமலச்செங் கமல
   மலர்முகம் கலந்ததென் கருத்தே.               (9)
 

20.     கடை-வாயில்,   காவல் - தடை;    தடுக்கப்படும்  இடம்.
மோதி-மோதுதலால்.  ‘முன்றிலின்கண் பிறங்கிய’  என்க. ‘பெரும்பற்றப்
புலியூர்க்  கூத்தா’  என  இயைக்க. இது,  வருகின்ற திருப்பாட்டிற்கும்
ஒக்கும்.   ‘செரு  வில்,  மேரு  வில்’   எனத்  தனித்தனி  இயையும்.
‘மேருவாகிய  வில்லினால்  முப்புரத்தின்கண்   தீயை  விரித்த’ என்க.
விரித்த-பரவச்செய்த.    கருவடி    குழை - பெரிய   நீண்ட  குழை.
‘குழைக்காதினையுடைய, அமலமாகிய முகம்’  என்க.  அமலம்-தூய்மை;
ஒளி.


மேல்