சொல்லகராதிச் சுருக்கம்

5. கண்டராதித்தர் திருவிசைப்பா

20. கோயில்


196.

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
   ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
  ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
   முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
   கூடுவ தென்றுகொலோ !                      (2)
 

196.   ஓவா-ஒழியாத,  முத்  தீ,  ‘ஆகவனீயம்,   காருக  பத்தியம்,
தக்கிணாக்கினி’  என்பன.  அஞ்சு  வேள்வி, ‘பிரமயாகம்,  தேவயாகம்,
பிதிர்யாகம்,  மானுடயாகம்,  பூதயாகம்  என்பன. ஆறங்கம்,   ‘சிட்சை,
கற்பம்,  வியாகரணம்,  நிருத்தம்,  சந்தோவிசிதி,  சோதிடம்’  என்பன.
இவை    வேதத்தின்   பொருளையும்,  ஒழுக்கத்தையும்   அறிதற்குக் கருவியாகும்.  ஆவேபடுப்பார் -  பசுக்களின் நெய். பால்,  தயிர்களை
மிகுதியாகச் சொரிவர். அரங்கு-அம்பலம்.   


மேல்