சொல்லகராதிச் சுருக்கம்

6. வேணாட்டடிகள் திருவிசைப்பா

21. கோயில்


209.

நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும் தொழும்
                                       [பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.    (5)
 

209. ‘‘நின்று............. தொழும்பனேன்’’  என்றதற்கு,‘  நின்றவிடத்தும்,
இருந்தவிடத்தும்,    கிடந்தவிடத்தும்   நினைந்து,    எழுந்தவிடத்துத்
தொழுகின்ற       தொழும்பனேன்’          என        உரைக்க  

நிற்றல்     முதலிய  மூன்றும்    செயலற்றிருக்கும்    நிலையாதலின்,
அக்காலங்களில்  நினைதலும்,  எழுதல்  கிளர்ந்தெழுந்து   செயற்படும்
நிலையாகலின்,   அக்காலத்தில்   தொழுதலும்   கூடுவவாயின.   ‘இரு
நிலையிலும்   உன்னை   மறவாதிருக்கின்ற  யான்,   ஒரோவொருகால்
எக்காரணத்தாலேனும்   மறந்திருப்பினும்  இருக்கவொட்டாய்’    என்க.
இதன்பின், ‘ஆயினும்’ என்பது வருவிக்க. ஒன்றி-உன்னைப்   பொருந்தி;
என்றது,  பிறவற்றை  மறந்து’ என்றவாறு. இது, ‘நினையாது’  என்பதில்,
‘நினைதல்’   வினையோடு   முடிந்தது.   ‘‘வரவு’’   என்றதில்,   ஓடு
உருபுவிரித்து,  ‘வரவொடு  நில்லாயாய்;  ஆப்போல்  கதறுவித்தி’ என
மாற்றி  உரைக்க. கன்று பிரி-கன்றினால் பிரியப்பட்ட, ‘‘கற்றா’’ என்றது,
வாளாபெயராய் நின்றது.


மேல்