சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


215.

மையல் மாதொரு கூறன் மால்விடை
   யேறி மான்மறி யேந்தி யதடங்
கையன் கார்புரை யுங்கறைக்
   கண்டன் கனன்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
   நீர்வயல் தில்லை யம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தை
   யுள்ளிடங் கொண்டனவே                       (1)
 


215.   மையல் மாது-காதலை உடைய பெண்டு; உமை - ‘காதலுக்கு
இடமாய  பெண்டு’  என்றும்  ஆம். கார் புரையும் - மேகம்  போலும்.
கறை - கறுப்பு. இதனுள், ‘‘கறை, சிந்தை’’ என்பவை கூன்.


மேல்