சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


219.

பந்த பாச மெலாம்அ றப்பசு
   பாச நீக்கிய பன்மு னிவரோ
டந்தணர் வணங்கும் அணி
   யார்தில்லை யம்பலவன்
செந்த ழல்புரை மேனியுந் திகழுந்
   திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான்சுழிஎன் உள்ளத்
   துள்ளிடங் கொண்டனவே.                     (5)
 


219.     ‘‘பந்த   பாசம்’’   என்றது,   செயற்கையாகிய   மாயை
கன்மங்களையும்,     ‘‘பசு    பாசம்’’    என்றது    இயற்கையாகிய
ஆணவத்தையும்  குறித்தன.  அற-அறுமாறு.  ‘‘பசு  பாசம்’’  என்னும்
ஆறாவதன்  தொகை  வடநூல் முடிபு. ‘‘சுழி’’ என்பதில் எண்ணும்மை
தொகுக்கப்பட்டது. இதனுள், ‘‘அணி, உள்ளத்து’’ என்பன கூன்.  


மேல்