7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
23. கோயில்
229. | அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே! அணிதில்லை நகராளீ! மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்காமோ ? திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஉச் செய்யாளுக் குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே. (4) |
229. அருள் செய்து - உயிர்கள்மேல் அருள்பண்ணி; இரண்டாமடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க மருள்-மயக்கம்; மையல். ‘என்றனை மருள்செய்து’ என மாற்றுக. பொன் பயப்பிப்பது - பொன்போலப் பசக்கச் செய்வது. வழக்காமோ-முறையாகுமோ. நீள் மணி-மிக்க ரத்தினம். செய்யாள்-சிறந்தவள்; உமையம்மை. உருவம் பாகமும் தந்து-உருவத்தைப் பங்காகவும் கொடுத்து. ‘தீயை’ என்பது, ‘தியை’,எனக் குறுகி நின்றது. தீயை நெற்றிக் கண்ணில் வைத்தோன். என்றது, ‘காமனை எரித்தோன்’ என்னும் குறிப்பினது. ‘கங்கையையும், உமையையும் கலந்தாற்போல என்னைக் கலத்தலாவது செய்தல் வேண்டும்; அல்லது என்னை வருத்துகின்ற காமனையாவது எரித்தல் வேண்டும்; இவற்றுள் ஒன்றேனும் செய்யாது என்னைப் பசப்பிப்பது முறையோ’ என்பாள், ‘கங்கையைச் சடைச்சேர்த்திச் செய்யாளுக்குப் பாகமும் தந்து தீயை நுதல் வைத்தோனே’ என்றாள். |