7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
23. கோயில்
230. | வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார் எழில்மறை யவற்றாலே செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய தில்லையம் பலத்தானைப் பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப் பொழியாதே. (5) |
230. வைத்த-ஒளித்து வைத்த. ‘‘துதிக்கின்றார்’’ என்றதன்பின் ‘அவ்வாறாக’ என்பது வருவிக்க. ‘துதிக்கின்றான்’ என்பது பாடம் அன்று. செய்த்தலை-வயலிடத்து. பத்தி-ஆசை. ‘பத்தியால் ஒழியாது’ என இயையும். பதைபதைத்தல்-மிக விரைதல். ‘பதைபதைத்தலை ஒழியாது’ என்க. ‘இது கூடுவதோ’ என்பது குறிப்பெச்சம். |