7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
239. | சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண் டுந்தி யிழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச் சிந்திப் பரிய தெய்வப் பதியுள் சிற்றம் பலந்தன்னுள் நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே. (4) |
239. தழைப் பீலி-தழைபோன்ற மயில் தோகை. சாதி ஒருவகை மரம்; இதன் காய் சிறந்ததொன்றாகக் கொள்ளப்படுதல் அறிக. கொண்டு-அகப்படக் கொண்டு, உந்தி இழியும்-தள்ளி ஓடுகின்ற. நிவா, ஓர் யாறு. ‘கரைமேல் விளங்கும் தில்லை’ என உரைக்க. ‘தில்லையாகிய தெய்வப்பதி’ என்றவாறு. ‘‘சிந்திப்பரிய’’ என்றது. ‘சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய ’ என்றபடி. |