7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
242. | சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை அத்தா அருளாய் அணிஅம் பலவா என்றென் றவர்ஏத்த முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக் கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே. (7) |
242. ‘‘அவர்’’ என்பதனை, ‘‘முனிவர்’’ என்றதன்பின்னும், ‘‘அணி அம்பலவா’’ என்பதை, ‘‘அத்தா’’ என்றதன்பின்னும் கூட்டுக. ‘‘நிரந்த தலம்’ என்பது முன்னும் வந்தது (2), ‘முளை மதி’ என இயைத்து. ‘புதுவதாய்த் தோன்றும் சந்திரன்’ என உரைக்க. கொத்து ஆர் - கொத்தாகப் பொருந்திய. கொத்து, பூங்கொத்துமாம். குழகன் - அழகன். |